Home Featured நாடு மே 27-ம் தேதி முதல் பக்கத்திற்காக ‘தி ஸ்டார்’ நாளிதழ் மன்னிப்பு!

மே 27-ம் தேதி முதல் பக்கத்திற்காக ‘தி ஸ்டார்’ நாளிதழ் மன்னிப்பு!

1028
0
SHARE
Ad

thestarfront pageகோலாலம்பூர் – கடந்த மே 27-ம் தேதி, சனிக்கிழமை, தங்கள் நாளிதழின் முதல் பக்கச் செய்தியுடன் கூடிய அட்டைப்படத்திற்காக மன்னிக்கேட்டது ‘தி ஸ்டார்’ செய்தி நிறுவனம்.

ஒவ்வொரு ஆண்டும் புனித ரமடான் மாதத்தின் நோன்பு திறக்கும் முதல் நாளில், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் புகைப்படத்தை முதல்பக்கப் படமாக ‘திஸ்டார்’ வெளியிட்டு வருகின்றது.

இவ்வாண்டும் அதே போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. எனினும், அப்புகைப்படத்தின் மேலே இருந்த செய்தியின் தலைப்பு, இஸ்லாமியர்களின் தொழுகை நடத்தும் புகைப்படத்தின் அழகை கெடுப்பது போல் அமைந்திருந்தது.

#TamilSchoolmychoice

“மலேசியத் தீவிரவாதத் தலைவர்” என்ற தலைப்பில் தீவிரவாதத்தில் ஈடுபடும் மலேசியர்களைப் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ‘தி ஸ்டார்’ நாளிதழின் மே 27-ம் தேதி முதல்பக்கத்திற்கு எதிராக நட்பு ஊடகங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தற்செயலாக இப்படி ஒரு செய்தி அமைந்துவிட்டதாகக் கூறி அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டிருக்கிறது.