Home Featured தமிழ் நாடு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான் கருணாநிதி – கமல் புகழாரம்!

தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான் கருணாநிதி – கமல் புகழாரம்!

850
0
SHARE
Ad

Kamalசென்னை – தனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசான்களில் ஒருவர் திமுக தலைவர் கருணாநிதி என உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, வைர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவரைப் பாராட்டி கமல்ஹாசன் ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கும் காணொளிப் பதிவில் கூறியிருப்பதாவது:-

சிறந்த திரைக்கதை ஆசிரியர், வசனம் எழுதக்கூடியவர் கருணாநிதி. அவர் மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல ஒரு அற்புதமான கதாசிரியர். கருணாநிதியை தமிழ் ஆசான் என்று கூறியதற்காக எம்.ஜி.ஆரும் என்னைப் பாராட்டினார். எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தவர்கள் கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன். கருணாநிதியின் வசனங்களை பேசிவிட்டால் ஒரு நடிகர் முழு தகுதி பெற்றவராகிறார். கருணாநிதி உடனான எனது உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது.”

#TamilSchoolmychoice

தசாவதாரம் படத்தை பார்த்துவிட்டு என் கன்னத்தை கிள்ளி பாராட்டினார். கருணாநிதி கிள்ளி பாராட்டிய கன்னம் என் கன்னம். கருணாநிதியின் வசனத்தை சிவாஜி கணேசன் குரலில் நடித்து காட்டுவது எனக்கு ஒரு பரீட்சை. வைரவிழா கொண்டாடுவது என்றால் எத்தனை இளமையில் அவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். எத்தனை முதுமைகளை தாங்கிப் பிடித்திருக்க வேண்டும். வாழ்த்துவதற்கு வயதில்லை என்பார்கள். வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை. நல்ல மனது இருந்தால் போது” – இவ்வாறு கமல் கூறியிருக்கிறார்.