Home Featured நாடு நம்மை நாமே இழிவு செய்வது இந்து சமயத்திற்குப் பேரிழப்பு – மோகன் ஷான் கருத்து!

நம்மை நாமே இழிவு செய்வது இந்து சமயத்திற்குப் பேரிழப்பு – மோகன் ஷான் கருத்து!

1007
0
SHARE
Ad

Selangorhindusangam32agmகோலாலம்பூர் – நட்பு ஊடகங்களில் நம்மை நாமே இழிவுப்படுத்துவது இந்து சமய எதிர்க்காலத்திற்கு பேரிழப்பைவித்திடும் என மலேசிய இந்து சங்க பேரவையின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி டத்தோ ஆர். எஸ். மோகன்ஷான் தெரிவித்திருக்கிறார்.

சிலாங்கூர் மாநில மலேசிய இந்து சங்கத்தின் 32-வது ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய ஆர்.எஸ்.மோகன் இது குறித்து மேலும் கூறுகையில், “அடிப்படை சமயநெறிக் கல்வி ஒன்று தான் இன்றைய சீர்கேடுகளைக் களைய உதவு முடியும். நாடு தழுவிய அளவில் பல்வேறு சமயம், சமயம் சார்ந்த பணிகளுடன் சமூகத்தின் அடிப்படை மனித நேய நடவடிக்கைகள் மூலம் இது வரை அதன் உன்னத சேவையை மலேசிய இந்து சங்கம் வழங்கிதான் வருகிறது” என்று ஆர். எஸ். மோகன் ஷான் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “ஆலயத்தில் சமய வழிப்பாடுகள் முறையோடு வழிநடத்தி செல்லும் அதேவேளையில்   வட்டார  சமூக நல சேவைக்கும் அதில் குறிப்பாக வசதியின்ன்மை கொண்ட இந்திய குடும்பகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் மையமாக  மேற்கொள்ள முற்பட ஆவணச் செய்ய வேண்டும்”

#TamilSchoolmychoice

Selangorhindusangam32agm1“இந்துக்களின் அடையாளமாக விளங்குகிறது நமது ஆலயங்கள் என்பது  மிகையாகாது என்றாலும் அதன்  அன்றாட கடமைகளில் இன்னும் பல வகையான சமுதாயத் தொண்டு வழியே நிலை நிறுத்த பல்வேறு அமைப்புகள், பொது இயக்கங்கள் ஒறினைந்து ஒற்றுமையை வளர்க்க உதவும் படலமாக அத்துடன் சமயநெறி, அடிப்படை சமயக்கல்வி,  இவற்றுடன் சமய போதனைகள், சொற்பொழிவு ஆகியவற்றுடன் ஆலயம் தோறும் சமூக சேவைகளை மேற்படும் தளமென்றும், ஐந்து அம்சங்கள் கொண்ட சாரம் வாயிலாக மேலும் அதன் வழி வட்டார மக்கள் பொது நலத்தின்  முக்கிய பங்கிற்கு பெரிதும் துணைப் புரியும்”

“நமது சமயத்தின் அடிப்படையான சமய நெறி முறைகளைப் பின்பற்றி நம் எதிர்க்காலத் தலைமுறைக்கு இன்று மலேசிய இந்து சங்கம் முழு மூச்சாக செயல்பட்டு வரும் தருணமிது. தேசியம் மற்றும் மாநில அரசுடன் தொடர்ந்து மிகுந்த உறவை மலேசிய இந்து சங்கம் வலுப்படுத்தி வருகின்றது. அதில் ஆலய பிரச்சினைகள், மத மாற்றம் போன்றையை தீர்வு காணும்  இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.”

Selangorhindusangam32agm3“சுயநலம் இல்லாத தொண்டூழீய எண்ணத்தால் மட்டுமே இத்தகைய சேவைப்பணியை அர்ப்பணம் செய்யப்படும் சங்கத் தொண்டர்கள் உதவியுடனும் இளம் தலைமுறையுடன் புத்தாக்க சிந்தனையுடன் சமய நன்நெறியுடன் கலை, பண்பாடு, கலாச்சாரம், சமயக்கல்வி செழிக்கவும் தழைக்கவும் தொடர்ந்து சங்கம் பாடுப்படும். எத்தகைய சோதனைகள் வந்ததாலும் எத்தனை  சவால்கள் மிக்க சட்ட ரீதியான பிரச்சினைகள் வந்ததாலும் ஆலமரம் போல் தலை நிமிர்ந்து நிற்கும் என்பது திண்ணம்.” என்று ஆர்.எஸ்.மோகன் ஷான் தெரிவித்தார்.

“மலேசிய இந்து சங்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் நமது  நாட்டின் சமயம் காக்கும் பணியில் சற்றும் பின் வாங்கிதும் இல்லை இனியும் வாங்கப்போவதுமில்லை” என்றும் சங்க பேரவை தேசியத் தலைவர் சுளூரைத்தார்.

மேலும், இக்கூட்டத்தில், 2017-2018 ஆண்டின் புதிய நிர்வாக அமைப்பாக தொண்டர்மணி மு. முனியாண்டியின் தலைமைத்துவத்தின் கீழ் சிலாங்கூர் மாநில பேரவையின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Selangorhindusangam32agm2இப்பொதுக்கூட்டதில் தீர்மானங்கள் இல்லாத பட்சத்தில் பொது கேள்விகள் கேட்டு அதற்கு தக்க பதில்கள் அளிக்கப்பட்டன.

மேலும், ஒன்பது சங்க  சேவையாளர்களுக்கு தேசியத் தலைவர் தலைமையில் தொண்டர்மாமணி, தொண்டர்மணி, விவேக நாயகி, விவேக நாயகன் என்ற விருதுகளை வழங்கி சங்கம் கெளரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தேசிய பேரவையின் உச்சமன்ற மேலாளர்கள் உட்பட 24 வட்டாரச் சங்கப் பொறுப்பாளர் களுடன் ஆலய நிர்வாக பொறுப்பாளர்கள் ஆகியோருடன் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் தியாகராஜன், இராமன் கலந்து சிறப்பித்தனர்.

காஜாங் ஜாலான் ரெக்கோ, ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலய பொன்னம்பலம் மண்டபத்தில் மிக நேர்த்தியாக நடைபெற்றது குறிப்பிட்டத்தக்கது.