Home Slider மலேசியாவில் மழை காரணமாக சிங்கப்பூரில் காய்கறி விலை ஏற்றம்!

மலேசியாவில் மழை காரணமாக சிங்கப்பூரில் காய்கறி விலை ஏற்றம்!

745
0
SHARE
Ad

vegetablesingaporeசிங்கப்பூர் – மலேசியாவில் மழை காரணமாக பண்ணைகளில் காய்கறி விளைச்சல் குறைவான காரணத்தால், அதன் விலை 20 விழுக்காடு வரை உயர்ந்திருக்கிறது.

இதனால், சிங்கப்பூர் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அனுப்பப்படும் விலையில் கடும் ஏற்றம் ஏற்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர் காய்கறிச் சந்தைகளில், செலரி, வெங்காயத் தாள், கொத்தமல்லி உள்ளிட்டவை 20 விழுக்காடு உயர்ந்திருப்பதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

செலரி கிலோ 5 முதல் 6 சிங்கப்பூர் டாலர் வரையும் (மலேசிய மதிப்பில் 15 முதல் 19 ரிங்கிட்), வெங்காயத் தாள் 6 முதல் 7 சிங்கப்பூர் டாலர் வரையும் (மலேசிய மதிப்பில் 19 முதல் 22 ரிங்கிட்), கொத்த மல்லி 14 முதல் 16 சிங்கப்பூர் டாலர் வரையும் (மலேசிய மதிப்பில் 43 முதல் 49 ரிங்கிட்) வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.