சிப்பாங் – வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதர் கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்ட வழக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஷா ஆலம் உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக மாற்றம் செய்யப்பட்டது.
அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹாரித் ஷாம் மொகமட் யாசின், நடுவர் மன்ற நீதிபதியாக அமர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 177ஏ-ன் கீழ் துணை அரசாங்க வழக்கறிஞர் இஸ்கண்டார் அகமட்டின் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு அனுமதி வழங்கினார்.
எனினும், உயர்நீதிமன்ற விசாரணைக்காக நாள் என்னவென்பதை நீதிமன்றம் அறிவிக்கவில்லை.