Home Featured உலகம் இலண்டனில் தமிழ் படிக்கும் ஜெர்மானியர்!

இலண்டனில் தமிழ் படிக்கும் ஜெர்மானியர்!

1042
0
SHARE
Ad

feature-german-studying tamil-london-loga-31052017 (2)

இலண்டன் – இலண்டனில் வசிக்கும் ஜெர்மன் நாட்டுக்காரர் ஒருவர் தமிழ் மீது ஆர்வம் கொண்டு, தனது 65-வது வயதிலும் அடிப்படைத் தமிழ் மொழியை இலக்கணத்தோடு பயின்று வருகிறார் என்ற சுவாரசியமான தகவலை, இலண்டனில் உள்ள நமது செல்லியல் வாசகர், ஆர்.லோகநாதன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த சுவாரசிய சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டிருக்கும் லோகநாதனின் பதிவின் தமிழாக்கம் இது:

#TamilSchoolmychoice

german-studying tamil-london-loga-31052017 (1)

இலண்டனில் தமிழ் படிக்கும் ரேமண்ட்டுடன் செல்லியல் வாசகர் லோகநாதன்…

“இன்று செவ்வாய்க்கிழமை (30 மே 2017) நான் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இரயில் வண்டியில் இந்த ஜெர்மன் நாட்டவரைச் சந்தித்தேன். அடிப்படைத் தமிழ் பாடப் புத்தகத்தை அவர் படித்துக் கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஆர்வத்துடன் அவரை அணுகி உரையாடத் தொடங்க, எங்களின் உரையாடல் ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீண்டு கொண்டே போக, நான் எனது பணிக்கே தாமதமாக சென்று சேர வேண்டிய நிலைமை ஏற்பட்டது.”

“65 வயதான அவர், ரேமண்ட் என்ற பெயர் கொண்டவர். தனது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், இலண்டனில் வசிக்கும் அவர், தமிழ் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, தெற்கு இலண்டனில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றில் பதிந்து கொண்டு தமிழ் படித்து வருகிறார். ரேமண்ட் ஏற்கனவே கணிதத் துறையில் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.”

“அவரது பெயர் என்னவென்று நான் கேட்டபோது உடனடியாக அதைத் தமிழிலேயே அவர் எழுதிக் காட்டினார். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை என் முகநூலில் பதிவிடுகின்றேன் என நான் கேட்டுக் கொண்டதற்கும் அவர் சம்மதித்தார். எதிர்வரும் சனிக்கிழமை தனது தமிழ்ப் பாடத் தேர்வுக்கு அமரவிருக்கும் அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்”

-இவ்வாறு அந்த சுவாரசியத் தகவலைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார், செல்லியல் வாசகர் லோகநாதன்.

தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ரேமண்ட் எதிர்வரும் சனிக்கிழமை தனது தமிழ்ப் பாடத் தேர்வில் வெற்றி பெற செல்லியல் சார்பாக நாமும் வாழ்த்து கூறுவோம்.

german-studying tamil-london-loga-31052017 (3)Raymond, 65 year old Maths graduate is studying Tamil in London…

The following is an interesting facebook posting by one of our readers R.Loganathan from London, about his meeting with a 65 year old German, Raymond, who is studying Tamil language in one of the Tamil schools in South London:

“Met this German Gentleman on the train on my way to work today. Saw him reading elementary Tamil book. Enthusiasm let me to ask him more and ended up having a chat for more than an hour to the extent of going late to work. Aged 65, retired and registered himself in one of the Tamil schools run in South London. He lives in London and have degree in Maths too. When I asked his name, he quickly wrote it in Tamil. His name is Reimund (Can take it as Raymond for English!).

He happily agreed when I asked him for a photo with him to be posted on my facebook. I promised him I will post it on facebook. Wish him well for his first Tamil exam this Saturday. The rest is for your interpretation!”