பாரிட் புந்தார் – தனது மகனுக்காக விளையாட்டுப் பொருட்கள் வாங்கிய பேராக் மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், அதில் தீவிரவாதக் குறியீடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
40 வயதான மாஹ்னுன் மட் இஷா என்ற அப்பெண், அப்பொருளில் “அல்லா”,”முகமட்” என்ற பாதகையை, தீவிரவாதி போல் தோற்றம் கொண்டவர் ஏந்தியிருக்கும் அச்சு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
அப்பொருளை தைப்பிங்கில் உள்ள ஒரு விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக் கடையில் வாங்கியதாகவும், அப்பொருள் சீனாவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த மே 25-ம் தேதி, பாரிட் புந்தாரில் உள்ள பேராக் இஸ்லாமிய சமயக் கவுன்சிலில் தகவல் தெரிவித்த அவர், பின்னர் காவல்துறையிலும் புகார் அளித்திருக்கிறார்.
கெரியான் காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் ஓமார் பக்தியார் யாக்கோப், இப்புகார் தாங்கள் பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
படம்: SHAIFUL SHAHRIN AHMAD PAUZI