Home Featured தமிழ் நாடு சென்னை சில்க்ஸ் கட்டிடம் தரைமட்டமாக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு!

சென்னை சில்க்ஸ் கட்டிடம் தரைமட்டமாக்கப்படும் – அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு!

1170
0
SHARE
Ad

chennaisilksசென்னை – சென்னை சில்க்ஸ் துணிகடை முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டதால், பாதுகாப்பில்லாத அக்கட்டிடத்தை முழுவதுமாக இடித்துத் தரைமட்டமாக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கட்டிடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டாலும் கூட, அதன் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியிருப்பதால், கட்டிடத்தை முழுவதுமாக இடித்துத் தரைமட்டமாக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதன் படி, இன்று முதல் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கும். இன்னும் 3 நாட்களில் பாதுகாப்பான முறையில் கட்டிடம் இடித்துத் தரைமட்டமாக்கப்படும். அதற்கான செலவை கட்டிட உரிமையாளரிடம் அரசு வசூலிக்கும். விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டியவர்கள் மற்றும் அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.