Home Featured நாடு கெந்திங் வரை புரோட்டோன் கார்களை ஓட்டியிருக்கிறேன் – மகாதீர் பதிலடி!

கெந்திங் வரை புரோட்டோன் கார்களை ஓட்டியிருக்கிறேன் – மகாதீர் பதிலடி!

739
0
SHARE
Ad

Mahathirporotonகோலாலம்பூர் – புரோட்டோன் தயாரித்த அனைத்து இரக கார்களையும் தானே ஓட்டி சோதனை செய்து பார்த்திருப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

தனக்கு எதிராக விமர்சித்து வருபவர்களுக்கு பதிலளித்திருக்கும் 92 வயதான மகாதீர், 1,740 மீட்டர் உயரமுள்ள பிரபல கேளிக்கை மையமான கெந்திங் மலைக்கு தானே புதிய இரக புரோட்டான் கார்களை ஓட்டிச் சென்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

புரோட்டான் நிறுவனத்தின் கிட்டத்தட்ட 50 விழுக்காடு பங்குகள் சீனாவின் கீலி ஆட்டோமொபைல் ஹோல்டிங் லிமிடட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது தொடர்பில் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த மகாதீர், “எனது குழந்தையை நான் இப்போது இழந்துள்ளேன். கூடிய விரைவில் எனது நாட்டையும் இழப்பேன்” என உருக்கத்துடன் தனது வலைப் பதிவில் பதிவிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மகாதீருக்கு எதிராக விமர்சனம் செய்த பலர், அவர் புரோட்டோன் காரை ஓட்டியதே இல்லை என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.