இலங்கை தமிழர்கள் குறித்த தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் அமுல்படுத்தியதா என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் அமர்வுகளின போது ஆராயப்பட உள்ளது.
மனித உரிமைப் பேரவையினால் இவ்வாறு நாடொன்றுக்காக விசேட அமர்வு ஒன்றை நடத்தும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
வடக்கு அதி உயர் பாதுகாப்பு வளையங்களை அகற்றுதல், அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்த தீர்மானத்தின் வழி பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய எந்தவொரு பரிந்துரையும் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தீர்மானம் நிறைவேற்றுவதற்கு 26 அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.