Home அரசியல் வரும் பொதுத்தேர்தலில் லிம் கிட் சியாங் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம்

வரும் பொதுத்தேர்தலில் லிம் கிட் சியாங் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம்

524
0
SHARE
Ad

lim kit siangகோலாலம்பூர், மார்ச்.23- வரும் பொதுத்தேர்தலில் எந்த தலைவர்கள் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள பொதுமக்கள் ஆவலாக இருக்கும் வேளையில் தான் பாஸ் சின்னத்தில் போட்டியிடலாம் என்று ஜ.செ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான லிம் கிட் சியாங் கோடி காட்டியுள்ளார்.

ஜசெக கட்சித் தேர்தல்களில் நிகழ்ந்த  சில பிரச்சினைகள் காரணமாக அந்தக் கட்சியின்  பதிவை சங்கப் பதிவதிகாரி ரத்துச் செய்தால் பாஸ் சின்னத்தில் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தேர்தலில் ஜ.செ.க. தனது சின்னத்தில் போட்டியிடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவ்வாறு நிகழ்ந்தால் ஜ.செ.க. வேட்பாளர்கள் சுயேட்சையாகவோ அல்லது வேறு கட்சி சின்னங்களிலோ அவர்கள் போட்டியிடலாம்.

#TamilSchoolmychoice

புதிய கட்சித் தேர்தல்களை நடத்த  ஜ.செ.க. மறுப்பதால் சங்கப்பதிவதிகாரி அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள்  ஜ.செ.க. உதவித் தலைவர் துங்கு அப்துல் அஜிஸ் துங்கு இப்ராஹிம் விடுத்துள்ள  வேண்டுகோள் பற்றி லிம் கருத்துரைத்தார்.

அரசாங்கத்தை பிரதிநிதித்து தான் சங்க பதிவிலாகா அலுவலகம் இயங்குகிறது. சட்ட விதிகளுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். ஆனால் நெருக்குதல் அளித்தால் பணிய மாட்டோம் என்று அவரது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.