கிள்ளான் – இன்று திங்கட்கிழமை இரவு 8.00 மணியளவில் கிள்ளானில் மஇகா கோத்தா ராஜா தொகுதி ஏற்பாட்டில், மஇகா மற்றும் சமூக இயக்கங்கள் ஏற்பாட்டில், 126 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்தப் போராடி வரும் குழுக்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சமூக ஆர்வலர் டத்தோ சந்திரகுமணன், மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ், ஐபிஎப் தலைவர்களில் ஒருவரான பினாங்கு மு.வீ.மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments