Home Featured கலையுலகம் அரிவாள் தூக்கும் சிவகார்த்திகேயன் – புதிய தோற்றம்!

அரிவாள் தூக்கும் சிவகார்த்திகேயன் – புதிய தோற்றம்!

1083
0
SHARE
Ad

velaikkaran-siva karthigeyan-சென்னை – தமிழ்த் திரையுலகின் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவராக உருவாகி விட்ட சிவகார்த்திகேயனின் அடுத்த படமான ‘வேலைக்காரன்’ திரையுலகில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

அந்தப் படத்தின் முதல் தோற்ற விளம்பரங்கள் – பதாகைகள் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டன.

கழுத்தில் கழுத்துப் பட்டை (டை), கணினி நிறுவனப் பணியாளர் போன்று முழுக்கை சட்டையுடன் தோற்றம், அதற்கேற்ப கழுத்தில் தொங்கும் நிறுவன அடையாள அட்டை – ஒரு கையில் வழக்கமாக கணினி நிறுவனப் பணியாளர்கள் கொண்டு செல்லும் கைப்பை – ஆனால் அதே தோற்றத்திலேயே வெண்மைச் சட்டையில் உறைந்திருக்கும் இரத்தக் கறை, இடது கையில் இரத்தம் தோய்ந்த நீண்ட அரிவாள் – என வித்தியாசமான முறையில் சிவகார்த்திகேயன் தரும் தோற்றத்துடன் இன்று வெளியாகியிருக்கிறது வேலைக்காரன் படத்தின் முதல் தோற்றம்!

#TamilSchoolmychoice

velaikkaran-siva karthigeyan-poster-full

எதிர்பார்ப்பு எகிறியிருப்பதற்கான மற்றொரு முக்கியக் காரணம் ‘தனிஒருவன்’ படத்தின் மூலம் வசூல் சாதனை ஏற்படுத்திய இயக்குநர் மோகன்ராஜா (நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன்) கைவண்ணத்தில் அடுத்து வெளிவரும் படம் ‘வேலைக்காரன்’ என்பதுதான்!

velaikkaran-movie-poster