Home Featured உலகம் ஊடகங்களுக்கு விஜய் மல்லையா கிண்டல் பதிலடி!

ஊடகங்களுக்கு விஜய் மல்லையா கிண்டல் பதிலடி!

801
0
SHARE
Ad

Vijay Mallaiyaஇலண்டன் – இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு, தலைமறைவாகிவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா வலை வீசித் தேடிவந்தது.

தீவிரத் தேடுதல் வேட்டையில், விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்தது தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான்  இடையிலான போட்டியை விஜய்மல்லையா நேரில் கண்டுகளித்தார்.

#TamilSchoolmychoice

இதனை ஊடகங்கள் படம் பிடித்து செய்தியாக வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், தனது டுவிட்டரில் ஊடகங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருக்கும் விஜய் மல்லையா, “எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டியைக் கண்டுகளித்த என்னைப் படம் பிடித்து செய்தியாக வெளியிட்டு ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. நான் இந்திய அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு அவர்களை ஊக்கப்படுத்த நினைக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.