மிரி – கடந்த ஆண்டு பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பில் காயோங், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சரவாக் தொழிலதிபர் டத்தோ ஸ்டீபன் லீ சீ கியாங் இன்று செவ்வாய்க்கிழமை மிரி உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் அவருடன் குற்றம்சாட்டப்பட்டிருந்த லீ சாங் லூன், சின் வுய் சங் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
எனினும், முக்கியக் குற்றவாளி என சந்தேகப்படும் முகமது பிட்ரி பாவுஸ் என்பவரை மட்டும் தற்காப்பு வாதங்களைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதோடு, இந்த வழக்கு வரும் ஜூன் 14-ம் தேதி தொடரும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
கடந்த 2016-ம் ஆண்டு, ஜூன் 21-ம் தேதி, மிரி நகரின் லூத்தோங் பகுதியில் உள்ள சமிக்ஞை விளக்கு அருகே மர்ம நபரால் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பில் காயோங் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.