Home Featured நாடு சிறுமி துன்புறுத்தல் சம்பவம்: மூதாட்டிக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்!

சிறுமி துன்புறுத்தல் சம்பவம்: மூதாட்டிக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்!

771
0
SHARE
Ad

oldladybeatingchildகோலாலம்பூர் – பூச்சோங்கில் சாப்பாட்டை கீழே சிந்தியதற்காக தனது பேத்தியை குச்சியால் கடுமையாக அடித்துத் துன்புறுத்திய மூதாட்டிக்கு, 7 நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நேற்று திங்கட்கிழமை பேஸ்புக்கில் காணொளி ஒன்று பலராலும் பகிரப்பட்டது. அக்காணொளியில், வயதான பெண் ஒருவர் தனது பேத்தியை மிகவும் முரட்டுத்தனமாக அடித்துத் துன்புறுத்துவது போலான காட்சிகள் பதிவாகியிருந்தன.

#TamilSchoolmychoice

இக்காணொளி வெளியான சில நிமிடங்களில், பூச்சோங்கில் உள்ள அவரது இல்லத்தின் முன் பொதுமக்கள் கூடி விட்டனர்.

பின்னர், காவல்துறையினர் வந்து அச்சிறுமியை மீட்டதோடு, அவரது பாட்டி என நம்பப்படும் பெண்ணை விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.