ஈரான் நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு!

    974
    0
    SHARE
    Ad

    Iran parliementதெக்ரான் – ஈரான் தலைநகர் தெக்ரானில் நாடாளுமன்றத்தில் உள்ளே புகுந்த 4  தீவிரவாதிகள், அங்கிருந்த பாதுகாவலர்களைச் சுட்டதில் பலர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைத்த காவல்துறையினர், இரு தீவிரவாதிகளைக் கைது செய்தனர்.

    ஆனால், இரண்டு தீவிரவாதிகளை பொதுமக்களை சிறைபிடித்து, அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி தப்பிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    #TamilSchoolmychoice

    தற்போது அவர்களைக் கைது செய்து பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கியிருக்கின்றனர்.

    இதனிடையே, தெக்ரானின் மற்றொரு பகுதியில் இரயில் நிலையத்தின் சுரங்கப் பாதையில் அமைந்திருக்கும் மதகுரு கோமேனியின் கல்லறை அருகே தீவிரவாதி ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தினான்.

    இதில் ஏற்பட்டிருக்கும் சேத விவரங்கள் குறித்து இன்னும் தெரியவில்லை.