Home Featured இந்தியா ஜூலை 17 – இந்திய அதிபர் தேர்தல்!

ஜூலை 17 – இந்திய அதிபர் தேர்தல்!

1006
0
SHARE
Ad

pranab-mukherjee

புதுடில்லி – நடப்பு இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி (படம்) தனது ஐந்தாண்டு கால பதவியை நிறைவு செய்து பதவி விலகிச் செல்லும் நிலையில், புதிய இந்திய அதிபருக்கான தேர்தல் எதிர்வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்குகள் ஜூலை 20-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து புதிய அதிபராக யாரை பாஜக அரசாங்கம் தேர்ந்தெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.

#TamilSchoolmychoice

அதே வேளையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஒரு பொது வேட்பாளரை அடையாளங் காணும் பேச்சு வார்த்தைகளில் இறங்கியிருக்கின்றன.