Home Featured வணிகம் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது!

பெட்ரோல், டீசல் விலை குறைந்தது!

1204
0
SHARE
Ad

Petrol Pumpsகோலாலம்பூர் – இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் ரோன் 95 மற்றும் ரோன் 97 இரக பெட்ரோல் விலை முறையே 5 காசுகள், 7 காசுகள் குறைகின்றது.

நாளை முதல் ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.05 ரிங்கிட் (பழைய விலை 2.10 ரிங்கிட்) ஆகவும், ரோன் 97 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2.31  ரிங்கிட் (பழைய விலை 2.38 ரிங்கிட்) ஆகவும் விற்பனையாகும்.

டீசல் 8 காசுகள் குறைந்து லிட்டர் 1.94 ரிங்கிட் (2.02) ஆக விற்கப்படும்.

#TamilSchoolmychoice

இந்த புதிய விலை வரும் ஜூன் 14-ம் தேதி வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரந்தோறும் எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.