Home Featured தமிழ் நாடு மலேசியத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது!

மலேசியத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது!

1070
0
SHARE
Ad

vaiko

சென்னை – மலேசியாவுக்குள் நுழைவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதிமுக கட்சியினர் இங்குள்ள மலேசியத் தூதரகம் முன்னிலையில் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால்  மலேசியத் தூதரகத்தின் முன்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, காவல் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து  தமிழகத்தின் பல தலைவர்கள் வைகோ மலேசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்காகத் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.