Home Featured இந்தியா ஜாகிர் நாயக்கின் இந்திய பாஸ்போர்ட் இரத்து!

ஜாகிர் நாயக்கின் இந்திய பாஸ்போர்ட் இரத்து!

749
0
SHARE
Ad

zakir naik -

புதுடில்லி – சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் இந்திய அனைத்துலக கடப்பிதழை (பாஸ்போர்ட்) இரத்து செய்யும் நடவடிக்கையில் இந்தியாவின் தேசியப் புலனாய்வுத் துறை இறங்கியிருப்பதாக ரிபப்ளிக் டிவி என்ற இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஜாகிர் நாயக்கிற்கு எதிராக அனைத்துலக காவல் துறையில் (இண்டர்போல்) சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்படவும் இந்திய அரசாங்கம் முனைந்துள்ளது என்றும் அந்தத் தொலைக்காட்சியின் செய்தி அறிக்கை ஒன்று தெரிவித்தது.

#TamilSchoolmychoice

ஜாகிர் நாயக் தற்போது மலேசியாவில் இருக்கிறாரா என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கும் அந்தத் தொலைக்காட்சி அலைவரிசை, இன்று வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என்ற காரணம் காட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நாட்டில் நுழைவதற்குத் தடை விதித்திருக்கும் மலேசிய அரசாங்கம் ஜாகிர் நாயக்கை மட்டும் மலேசியாவில் சுதந்திரமாக நடமாட அனுமதித்திருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறது.