Home Featured உலகம் பிரிட்டன் தேர்தல்: இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி!

பிரிட்டன் தேர்தல்: இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி!

912
0
SHARE
Ad

AP6_6_2017_000129Aஇலண்டன் – பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில், அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற கட்சி என்ற முறையில், கன்சர்வேடிவ் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது என்றும், தெரசா மே மீண்டும் பிரதமராகத் தொடரவிருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இத்தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த தேர்தலில், 10 இந்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்தத் தேர்தலில் இன்னும் 2 பேர் கூடுதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

தொழிலாளர் கட்சியின் சார்பில் 14 இந்தியர்களும், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் 13 இந்தியர்களும் என மொத்தம் இந்தத் தேர்தலில் 27 இந்தியர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 12 பேர் வெற்றி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 12 பேரில் தொழிலாளர் கட்சியின் சார்பில் 7 இந்தியர்களும், கன்சர்வேடிவ் கட்சி சார்பில் 5 இந்தியர்களும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.