இலண்டன் – (மலேசிய நேரம் காலை 9.30 மணி நிலவரம்) பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் வேளையில், இதுவரையில் லேபர் பார்ட்டி எனப்படும் தொழிலாளர் கட்சி 67 தொகுதிகளை வென்றிருக்கின்றது.
கன்ர்வேடிவ் கட்சி 57 தொகுதிகளில் மட்டுமே வென்று பின்தங்கியுள்ளது. இருப்பினும் தெரசா மே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 314 தொகுதிகள் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என வாக்களிப்புக்கு பிந்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஸ்காட்லாந்து நேஷனல் கட்சி 13 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. மற்ற சிறிய கட்சிகள் 4 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றன.