Home Featured உலகம் மியன்மார் விமான விபத்து: 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்!

மியன்மார் விமான விபத்து: 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்!

884
0
SHARE
Ad

Myanmar plane1யாங்கூன் – 100-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு மாயமான மியன்மார் இராணுவ விமானத்தின் பாகங்கள், அந்தமான் கடலில் காணப்பட்டன.

இந்நிலையில், மீட்புப் பணிகளின் போது, அவ்விமானப்பயணிகளில், 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும், அவர்களின் நிலைமை என்னவென்பது குறித்த உறுதியான தகவல்கள் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

கடந்த ஜூன் 7-ம் தேதி, மியன்மாரின் தென் நகரமான மையேக்கிலிருந்து யாங்கூன் நோக்கிப் புறப்பட்ட அவ்விமானத்தில், 12-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

முதலில், அவ்விமானத்தில் மொத்தம் 105 பயணிகள் இருந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் மொத்தம் 120 பயணிகள் என்று கூறப்பட்டது. எனினும், அதிகாரப்பூர்வமான பயணிகள் பட்டியல் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.