Home Featured இந்தியா “நீட்” தேர்வு முடிவுகள் வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி

“நீட்” தேர்வு முடிவுகள் வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி

1197
0
SHARE
Ad

neet-exam-2017

புதுடில்லி – தமிழ் நாட்டில் நீட் (NEET) தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடை உத்தரவை நீக்கி, அந்தத் தேர்வு முடிவுகளை வெளியிட இன்று திங்கட்கிழமை காலை கூடிய இந்திய உச்ச நீதிமன்ற அமர்வு அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் நீட் தேர்வுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

சிபிஎஸ்இ என சுருக்கமாக அழைக்கப்படுவது சென்ட்ரல் போர்ட் ஆப் செகண்ட்ரி எடுகேஷன் (Central Board of Secondary Education) எனப்படும் இந்தியாவில் உள்ள இடைநிலைக் கல்விக்கான தேர்வு வாரியமாகும். இந்தத் தேர்வு வாரியம்தான் நீட் தேர்வுகளை நடத்துகிறது.

2017-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுத் தாள்கள் மொழிவாரியாக முரண்பட்டிருந்தன எனக் காரணம் காட்டி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்திருந்தது.

ஏறத்தாழ பத்தரை இலட்சம் மாணவர்கள் இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் நீட் தேர்வு எழுதிய நிலையில், சுமார் ஒன்றரை இலட்சம் மாணவர்கள் 8 வட்டார மொழிகளில் நீட் தேர்வு எழுதினர்.

நீட் என்பது தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாகும் (National Eligibility-cum-Entrance Test). இந்த தேர்வு மருத்துவம் மற்றும் பொறியியல் பயில விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும்.

நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு தேவையில்லை என்றும், அவர்களுக்கு அந்தத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நீண்ட காலமாக தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் போராடி வருகின்றன.