Home Featured உலகம் ஆஸ்திரேலியாவுக்கு ஆன்லைன் விசா – இந்தியக் குடிமக்களுக்கு புதிய வசதி!

ஆஸ்திரேலியாவுக்கு ஆன்லைன் விசா – இந்தியக் குடிமக்களுக்கு புதிய வசதி!

752
0
SHARE
Ad

மெல்பர்ன் – வரும் ஜூலை 1-ம் தேதி முதல், இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள்  இணையதளம் (ஆன்லைன்) மூலமாக ஆஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருக்கிறது.

இது குறித்து ஆஸ்திரேலிய குடிநுழைவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு உதவி அமைச்சர் அலெக்ஸ் ஹாக்கே கூறுகையில், இந்தியர்கள் எளிதான முறையில் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்க இந்த இணையதள விசா விண்ணப்ப வசதி மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா வர இந்தியப் பிரஜைகள் மத்தியில் அதிக ஆர்வம் இருப்பதால், இந்தப் புதிய வசதி கொண்டு வரப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

கடந்த 5 மாதங்களில் மட்டும் 65,000 இந்தியர்களுக்கு ஆஸ்திரேலியா விசா வழங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய குடிநுழைவு இலாகா அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.