Home Featured நாடு பினாங்கு ஆலயங்கள், தேவாலயங்கள் 50,000 ரிங்கிட் நிதிக்கு விண்ணப்பிக்கலாம்!

பினாங்கு ஆலயங்கள், தேவாலயங்கள் 50,000 ரிங்கிட் நிதிக்கு விண்ணப்பிக்கலாம்!

786
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் – பினாங்கில் அமைந்திருக்கும் ஆலயங்கள், தேவாலயங்கள் ஆகியவற்றின், மராமத்துப் பணிகள் அல்லது புதிய கட்டிடங்கள் கட்டுதல் ஆகியவற்றிற்காக மாநில அரசு சிறப்பு நிதி வழங்கி வருகின்றது.

தகுதியிருக்கும் ஆலய, தேவாலய நிர்வாகத்தினர், தலா 50,000 ரிங்கிட் வரை, நிதி பெற்றுக் கொள்ள முடியும் என்று மாநில செயற்குழு கவுன்சிலர் ஜக்தீப் சிங் டியோ தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்பு 20,000 ரிங்கிட் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“தற்போது கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பு, கட்டுமானப் பணிகளுக்கான விலை அதிகரிப்பு ஆகியவை ஜிஎஸ்டி காரணமாக உயர்ந்திருப்பதால், நிதியும் அதிகரித்திருக்கிறது”

“கூட்டரசு அரசாங்கம் கட்டிடங்கள், வழிபாட்டுதலங்களின் மராமத்துப் பணிகள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி-ஐ விலக்கும் என நம்புகிறோம்” என்று இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஜக்தீப் தெரிவித்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு, செப்டம்பர் 9-ம் தேதி, இந்த நிதி பட்டுவாடா தொடங்கப்பட்டதாகவும், 31 வழிபாட்டுத்தலங்களுக்கு மொத்தம் 611,611.20 ரிங்கிட் நிதி கொடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜக்தீப் தெரிவித்தார்.

தற்போது 6,402,075.80 ரிங்கிட் நிதி மிச்சம் இருப்பதாகவும் ஜக்தீப் குறிப்பிட்டார்.