Home Featured நாடு தமிழ்ப்பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி 2017

தமிழ்ப்பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி 2017

1064
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தித்தியான் டிஜிட்டல் திட்டம் 2009 -ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்ப நடுவங்களை அமைக்க வழிகாட்டுதல், மாணவர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறனறிவை வழங்குதல், நகர், புறநகர் மாணவர்களிடையே தகவல் தொடர்பு தொழில்நுட்ப இடைவெளியை குறைத்தல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டதின் வழி சுமார் 60 தமிழ்ப்பள்ளிகளும் 23,000 மாணவர்களும் பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தை கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கமும், மலேசிய சமுக கல்வி அறவாரியமும் இணைந்து பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியத்துடன் இணைந்து நடத்தி வருகிறனர். இத்திட்டம் சீரிய முறையில் செயல்பட மலேசிய சமூக பொருளாதாரா மேம்பாட்டு பிரிவு(செடிக்) & மலேசிய சமுக கல்வி அறவாரியம் அவர்களின் முதன்மை நன்கொடையில் சிறப்பாக செயல்ப்படுகிறது.

தித்தியான் டிஜிட்டல் திட்ட ஏற்பாட்டில் தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி கடந்த 2 வருடங்களாக வெற்றிகரமாக நடைப்பெற்று வருகிறது. 2015 ஆம் ஆண்டு 88 தமிழ்ப்பள்ளிகளில் 972 மாணவர்கள் பங்கெடுத்து கொண்டனர். 2016 ஆம் ஆண்டு 96 தமிழ்ப்பள்ளிகளில் 942 மாணவர்கள் பங்கெடுத்து இப்போட்டியை வெற்றியடையச் செய்தனர்.

#TamilSchoolmychoice

இப்போட்டியின் நோக்கம், தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்களை பங்கொடுக்க வகைச் செய்தலும், மாணவர்களின் உருவாக்கத் திறனையும் படைப்பாக்க திறனையும் வெளிகொணருதலாகும்.

இவ்வருடமும் இப்போட்டி மாநில நிலையிலும், தேசிய நிலையிலும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய சமூக கல்வி அறவாரியம், உத்தமம் மலேசியா இணை ஏற்பாட்டில் நடைப்பெற உள்ளது. இத்திட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை தவிர்த்து மலேசியாவில் உள்ள 524 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இப்போட்டியில் பங்கெடுக்கலாம்.

இப்போட்டியில் 5 விதமான போட்டிகள் நடைபெறும். அவை வடிவமைத்தல் போட்டி (Drawing), வலைத்தள உருவாக்கம் (Website Designing) போட்டி, இருபரிமான அசைவூட்ட வடிவமைத்தல் போட்டி (2D Animation), தகவல் தொடர்புத் தொழில்நுட்ப புதிர்ப்போட்டி (ICT Quiz), ஸ்க்ராட்ச் வடிவமைத்தல் (Scratch) போட்டிகள் ஆகும்.

தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழிநுட்பப் போட்டியில் முதல் மூன்று நிலை வெற்றியாளர்களுக்கு சிறந்த பரிசுகள் காத்திருக்கின்றன. வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ், வெற்றிக்கோப்பை & அட்டை கணினி (Tab) வழங்கப்படும்.

மாநில அளவிலான போட்டிகளின் விபரங்கள் :

இந்நிகழ்வின் தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி எதிர்வரும் 05 ஆகஸ்ட் 2017, காலை 8.00 மணிக்கு, IPPP, மலாயா பல்கலைகழகத்தில் நடைபெறும்.

மேல் விபரங்களுக்கு:

கலையரசன் நடராஜன் – 016 4876 512
சோ. கலைவாணி – 010 -369 0432
இணையதள முகவரி : www.titiandigital.org
வலைப்பூ முகவரி : www.titiandigital.blogspot.com

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி :

ICT COMPETITION 2017
இந்து இளைஞர் இயக்கம் கோலக்கிள்ளான்
PERTUBUHAN BELIA HINDU PELABUHAN KLANG
NO,17C SOLOK SERI SARAWAK 36,
TAMAN SRI ANDALAS, 41200 KLANG
SELANGOR DARUL EHSAN.
03- 3324 0678
மின்னஞ்சல் முகவரி : ptdictcompetition@gmail.com