Home Featured கலையுலகம் விவசாயிகளின் கடனை இரத்து செய்ய விஷால் கடிதம்!

விவசாயிகளின் கடனை இரத்து செய்ய விஷால் கடிதம்!

879
0
SHARE
Ad

சென்னை – விவசாயிகளின் கடனை இரத்து செய்யுமாறு நடிகர் விஷால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

அக்கடிதத்தில் விஷால் கூறியிருப்பதாவது:-

“ஜெயலலிதாவின் கனவுகளை நினைவாக்க சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தற்போதைய தமிழக முதல்வராகிய தாங்கள் நமது தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன். உத்திரப் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்ரா உள்ளிட்ட மாநிலங்கள் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கின்றன. அதே போல் தமிழக அரசும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்து அவர்களது எதிர்காலத்தை வளமாக்க வேண்டும்” என்று விஷால் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.