Home Featured தமிழ் நாடு சென்னை சில்க்ஸ் கட்டிடம் முற்றிலும் இடிக்கப்பட்டது!

சென்னை சில்க்ஸ் கட்டிடம் முற்றிலும் இடிக்கப்பட்டது!

1083
0
SHARE
Ad

சென்னை – தீவிபத்தால் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் முற்றிலுமாக இடிக்கப்பட்டது.

இடிக்கும் பணியில் உயிர் பலி உட்பட பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் கூட, அக்கட்டிடம் பல நாள் முயற்சிகளுக்குப் பிறகு இன்று செவ்வாய்க்கிழமை முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது.

இதனையடுத்து, நாளை புதன்கிழமை முதல் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெறவிருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த மே 31-ம் தேதி, சென்னை திநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது. தீயணைப்புப் படையினர் எவ்வளவோ முயற்சி செய்தும் தீயை அணைக்க முடியாமல், கட்டிடம் முற்றிலும் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.