Home Featured கலையுலகம் ‘மெர்சல்’ – மீசையை முறுக்கும் ‘தளபதி’ விஜய்!

‘மெர்சல்’ – மீசையை முறுக்கும் ‘தளபதி’ விஜய்!

1088
0
SHARE
Ad

சென்னை – ‘தெறி’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லி கூட்டணியில், விஜய் நடித்து வரும் புதிய படத்திற்கு ‘மெர்சல்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

இத்தனை நாட்களாக ‘விஜய் 61’ என்ற பெயரிலேயே குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை விஜய் பிறந்தநாளான நேற்று புதன்கிழமை வெளியானது.

விஜயின் 61-வது படம், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் என பல சிறப்புகள் கொண்ட இத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

#TamilSchoolmychoice

முதல் பார்வை போஸ்டரில் ‘மெர்சல்’ என்ற தலைப்பில் தெரியும் ஜல்லிக்கட்டுக் காளையின் உருவம் பலரையும் வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

அதேபோல் நடிகர் விஜயும் மீசையை முறுக்கிக் கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.