Home Featured நாடு பிரதமரின் ஹரிராயா உபசரிப்பு – 70 ஆயிரம் பேர் திரண்டனர்

பிரதமரின் ஹரிராயா உபசரிப்பு – 70 ஆயிரம் பேர் திரண்டனர்

893
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – ஹரிராயா கொண்டாட்டங்களை முன்னிட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்ரா ஜெயாவிலுள்ள தனது ஸ்ரீ பெர்டானா இல்லத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நடத்திய திறந்த இல்ல பொது உபசரிப்பில் ஏறத்தாழ 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள் என மதிப்பிடப்படுகிறது.

பொதுமக்களோடு, அமைச்சர்களும், அயல் நாட்டு தூதர்களும், இந்த பொது இல்ல உபசரிப்பில் திரளாகக் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில் துணைப் பிரதமர் மற்றும் மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா, அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ உமாராணி….

மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய் – டாக்டர் சுப்ரா…

இந்தியக் குடும்பம் ஒன்றை வரவேற்கும் பிரதமர் நஜிப்…

பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்புக்கு வருகை தந்த ஐபிஎப் கட்சித் தலைவர் டத்தோ சம்பந்தனுடன் டாக்டர் சுப்ரா தம்பதியர் மற்றும் மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மது மாரிமுத்து, இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜ்…