Home Featured கலையுலகம் பிக்பாஸ் பரபரப்பு: ஜூலியைக் கதறி அழ வைத்த சக போட்டியாளர்கள்!

பிக்பாஸ் பரபரப்பு: ஜூலியைக் கதறி அழ வைத்த சக போட்டியாளர்கள்!

928
0
SHARE
Ad

சென்னை – உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகின்றது.

இதில், நடிகை அனுயா, நடிகர் வையாபுரி, கவிஞர் சிநேகன், நடிகர் கணேஷ் வெங்கட்ராம், நடிகர் பரணி, நடிகை நமீதா, நடிகை ஓவியா, நடிகர் ஸ்ரீ , காயத்ரி ரகுராம், ரைசா வில்சன், ஆர்த்தி கணேஷ், கஞ்சா கருப்பு, ஜூலியானா, ஆரர், சக்தி வாசு என மொத்தம் 15 பிரபலங்கள் பங்கேற்றிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் 100 நாட்கள் பல கட்டுப்பாடுகளுடன் ஒரே வீட்டில் தங்கியிருக்க வேண்டும்.

இவர்களில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற ஜூலி மட்டும் தான் சினிமா தொடர்பு இல்லாதவர். ஜல்லிக்கட்டில் கிடைத்த பிரபலத்தின் மூலம் அவருக்கு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், 15 பிரபலங்களும் ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கினர்.

முதல்நாளே, ஆர்த்திக்கும், ஜூலிக்கும் படுக்கைத் தேர்வில் பிரச்சினை வெடித்தது. அதனையடுத்து, ஜூலி எல்லோரிடமும் சகஜமாகப் பேசவும், கலகலப்பாக நடந்து கொள்ள முயற்சி செய்தார்.

சோர்வாகக் காணப்பட்ட நடிகர் ஸ்ரீயிடம் சென்று தனிமையில் பேசி, ‘விட்டுப்போகாத .. எனக்காக இரு’ என்று கூறி கேமரா கண்ணிலும் சிக்கினார்.

காயத்ரி ரகுராமும், ஆர்த்தியும் தொடக்கத்தில் இருந்தே ஜூலியிடம் கடுப்பு காட்டி வந்தனர்.

இந்நிலையில், விஜய்டிவி வெளியிட்டிருக்கும் விளம்பரக் காணொளி ஒன்றில், ஜூலி, காயத்ரி, ஆர்த்தி ஆகிய மூவரும் உரையாடுகிறார்கள். அதில் காயத்ரியும், ஆர்த்தியும் சேர்ந்து ஜூலியின் ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து கடுமையாக விமர்சிக்கின்றனர். சந்தேகத்துடன் பல கேள்விகளையும் கேட்கின்றனர். அதையும் ஜூலி சமாளிக்க முயற்சி செய்கிறார்.

அதன் பின்னர், பிக்பாஸ் அறையில் இருந்து எல்லோருக்கும் தனித்தனியாக அழைப்பு வருகிறது.

அதில், 15 பேரில் யாராவது ஒருவரை போட்டியிலிருந்து நீக்க வேண்டும் என்றால் யாரை நீக்கச் சொல்வீர்கள்? என்ற கேள்வி கேட்கப்படுகிறது.

இக்கேள்விக்குப் பெரும்பாலானவர்கள் ஜூலி, அதிகப்பிரசங்கித் தனமாகப் பேசுகிறார் அதனால் அவரை நீக்கும் படி கூறுகின்றனர்.

இந்நிலையில், தனக்கு எதிராகப் பலர் ஒன்று கூடி, தன்னை வெளியேற்ற நினைப்பதை உணரும் ஜூலி அழுவது போலான காட்சிகளும் இணையத்தில் கசித்துள்ளன.

இவற்றின் நிஜ கதை என்ன என்பது இன்று புதன்கிழமை இரவு தெரியவரும்.