Home Featured நாடு மகாதீர் அழைப்பிதழ் இரத்து: ‘அது அரண்மனையின் முடிவு’ – சாஹிட் தகவல்!

மகாதீர் அழைப்பிதழ் இரத்து: ‘அது அரண்மனையின் முடிவு’ – சாஹிட் தகவல்!

671
0
SHARE
Ad

Ahmad-Zahid-Hamidiகோலாலம்பூர் – புதிய மாமன்னர் அரியணையில் அமரும் நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டிற்கு அனுப்பப்பட்ட அழைப்பை, இருக்கை இல்லை என்று கூறி திரும்பப் பெற்றது அரண்மனையின் முடிவு தான் என்று துணைப் பிரதமர் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

“நான் விசாரித்துவிட்டேன். அந்த அழைப்பை திரும்பப் பெறும் உத்தரவு, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அலுவலகத்திலிருந்து செல்லவில்லை, அது இஸ்தானா நெகாராவில் இருந்து சென்றது”

“நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரண்மனையின் உத்தரவின் அடிப்படையில் தான் செயல்பட்டார்கள். நஜிப்பையோ அல்லது பிரதமர் அலுவலகத்தையோ குற்றம் சொல்லாதீர்கள்”

#TamilSchoolmychoice

“இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்தவர்கள் அரண்மனையிடம் விளக்கம் கேளுங்கள்” என்று சாஹிட் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.