பெர்லின் – நேற்று திங்கட்கிழமை மாலையில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஒரு கிறிஸ்மஸ் சந்தையில் வேன் போன்ற பெரிய வாகனத்துடன் நுழைந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். தாக்குதல் நடத்திய வாகனத்திலேயே வந்த மற்றொரு தீவிரவாதி சம்பவத்திலேயே மரணமடைந்தான்.
சந்தைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய கறுப்பு நிற பெரிய வேன் வாகனம்…
போலந்து நாட்டின் பதிவு எண் கொண்ட அந்த வாகனம் மூலம், கெய்சர் வில்ஹெம் (Kaiser-Wilhelm Memorial Church) என்ற வரலாற்றுபூர்வ தேவாலயத்தின் அருகில் நடந்து கொண்டிருந்த சந்தைக்குள் நுழைந்து மூர்க்கமான முறையில் அங்கிருந்த கடைகளின் மீது மோதித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தப் பகுதி பெர்லினில் அதிக அளவில் மக்கள் கூடும் பிரபலமான சந்தைப் பகுதியாகும்.