கோலாலம்பூர், மார்ச் 24- இந்திய சமுதாயம் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்குரிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதையும் அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தும் வகையில், ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கடந்த மார்ச் 11 ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், பிரதமர் நஜிப் துன் ரசாக், நாளை ஹிண்ட்ராப் தலைவர்களைச் சந்திக்கவிருக்கிறார்.
ஹிண்ட்ராப் முன்வைத்துள்ள அடுத்த ஐந்தாண்டுக்கான திட்ட வரைவினை பற்றி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு வேதமூர்த்திக்கு கடந்த மார்ச் 22 ஆம் தேதி பிரதமரிடமிருந்து அழைப்பு வந்ததையடுத்து, ஹிண்ட்ராப் தலைவர்கள் நாளை நண்பகல் 12 மணிக்கு பிரதமரை சந்திக்கவிருக்கின்றனர்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து வேதமூர்த்தி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.