Home கலை உலகம் அமிதாப் பச்சனுக்கு ஆந்திர அரசின் என்.டி.ஆர். விருது

அமிதாப் பச்சனுக்கு ஆந்திர அரசின் என்.டி.ஆர். விருது

770
0
SHARE
Ad

amitabachanஹைதராபாத், மார்ச் 24- தெலுங்கு சினிமாத்துறையின் 2011ஆம் ஆண்டிற்கான, ஆந்திர அரசின் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

அதில் என்.டி.ஆர் தேசிய விருதுக்கு ஹிந்தித் திரையுலகின் பழம்பெரும் நடிகரான அமிதாப் பச்சனின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்குத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகரான கைகால சத்தியநாராயணா, ரகுபதி வெங்கைய்யா விருதினைப் பெறுகிறார்.

#TamilSchoolmychoice

நடிகர் கிருஷ்ணாவின் சகோதரர் ஜி.ஆதிசேஷகிரி ராவும், மற்றொரு தயாரிப்பாளரும் தெலுங்கு திரைத்துறையில் அவர்கள் செய்த சேவைக்காக பி.நாகிரெட்டி சக்கரபாணி விருதினைப் பெறுகிறார்கள்.

இதில், அமிதாப் பச்சனுக்கு ரூ.5 லட்சமும் மற்றவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.

தனது திரைக்கதை வசனத்தாலும், இயக்கத்தாலும் பெயர் பெற்ற ஷியாம் பெனகலுக்கு அவருடைய இயக்குனர் திறமையைப் பாராட்டி, பி.என்.ரெட்டி விருது வழங்கப் பட உள்ளது.