Home Featured கலையுலகம் பிக் பாஸ்: சிநேகனுக்குப் பதிலாக புதிய தலைவர் காயத்ரி ரகுராம்!

பிக் பாஸ்: சிநேகனுக்குப் பதிலாக புதிய தலைவர் காயத்ரி ரகுராம்!

1097
0
SHARE
Ad

சென்னை – நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பு தலைவரான சிநேகனின் பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய தலைவரை பங்கேற்பாளர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தனர்.

அதன்படி புதிய தலைவராக திரைப்பட நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

அதே வேளையில், இந்த வாரத்தில் வெளியேற்றப்படுபவர்கள் யார் என்ற வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. ஒவ்வொருவரும் தனி அறைக்கு வந்து யாரை வெளியேற்ற வேண்டும் என ஆளுக்கு இருவரைப் பெயர் குறிப்பிட்டனர். அதற்கான காரணங்களையும் தெரிவித்தனர். அதன் படி கீழ்க்காணும் மூவரின் பெயர் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றது.

  1. நடிகர் பரணி
  2. நடிகர் கஞ்சா கருப்பு
  3. நடிகை ஓவியா

இவர்களில் யார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீடிக்க வேண்டும், யார் வெளியேற்றப்பட வேண்டும் என தொலைக்காட்சி இரசிகர்கள் இனி வாக்களிப்பார்கள்.

ஸ்டார் விஜய் அலைவரிசையில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமூக ஊடகங்களில் பல கிண்டல்களுக்கும் கேலிக்கும் ஆளாகி இருக்கும் அதே வேளையில், கோடிக்கணக்கான இரசிகர்கள் தவறாது பார்க்கும் நிகழ்ச்சியாகவும் மாறியிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மேற்குறிப்பிட்ட சுவாரசியக் காட்சிகளை இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணிக்கு அஸ்ட்ரோவின் 224 ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் மலேசிய இரசிகர்கள் கண்டு களிக்கலாம்.