Home Slider தினகரன் மீதான அன்னியச் செலாவணி வழக்கிற்கு இடைக்காலத் தடை!

தினகரன் மீதான அன்னியச் செலாவணி வழக்கிற்கு இடைக்காலத் தடை!

1643
0
SHARE
Ad

TTV Dhinakaranசென்னை – அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் மீதான அன்னியச் செலாவணி மோசடி வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

வெளிநாட்டு நிறுவனங்களில் சட்ட விரோதமாக முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடர்பாக, அமலாக்கத்துறை தனக்கு எதிராகப் பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கவும், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதிக்கவும் டிடிவி தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில், டிடிவி தினகரனின் கோரிக்கையை ஏற்று, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.