Home Featured இந்தியா மல்லையாவுக்கு எதிராக 2,000 பக்க ஆதாரங்கள் – இந்தியா தாக்கல்!

மல்லையாவுக்கு எதிராக 2,000 பக்க ஆதாரங்கள் – இந்தியா தாக்கல்!

1276
0
SHARE
Ad

vijay-mallaiyaaபுதுடெல்லி – தொழிலதிபர் விஜய் மல்லையா மீதான நிதிமுறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான 2,000 பக்க விரிவான ஆதாரங்களைத் தயாரித்திருக்கும் இந்தியா அதனை பிரிட்டன் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 14-ம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

மேலும், முக்கிய வழக்கு வரும் டிசம்பர் 4-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

நேற்று வியாழக்கிழமை இவ்வழக்கு விசாரணையில் நேரில் கலந்து கொண்ட மல்லையா, தமது தரப்பு ஆதாரங்களை சமர்ப்பிப்போம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வரும் டிசம்பர் 4-ம் தேதி வரை மல்லையா பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.