Home Slider சஞ்சய் காந்தியின் மகளா?- பெண்ணால் பரபரப்பு!

சஞ்சய் காந்தியின் மகளா?- பெண்ணால் பரபரப்பு!

1039
0
SHARE
Ad

Sanjaygandhi's daughterபுதுடெல்லி – மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகனான மறைந்த சஞ்சய் காந்தி கடந்த 1980-ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் இறந்தார்.

இந்நிலையில், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தான் சஞ்சய் காந்தியின் மகள் என்று கூறி பெண் ஒருவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரியா சிங் பால் என்ற 48-வயதான அப்பெண் செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் குழந்தையாக இருந்த போதே குடும்பம் ஒன்றால் தத்தெடுக்கப்பட்டதாகவும், பின்னர் தன்னுடைய நிஜ பெற்றோர் பற்றி தேடிய போது, இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்தி தான் தனது தந்தை என்பதை அறிந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், பிரியா சிங் பாலின் இந்த திடீர் அறிவிப்பு டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.