Home Slider உணவு தயாரிக்க தாமதம்: மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்!

உணவு தயாரிக்க தாமதம்: மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்!

1141
0
SHARE
Ad

guns-1புதுடெல்லி – டெல்லி அருகே, இரவு உணவு தயாரிக்கத் தாமதப்படுத்திய மனைவியை, அவரது கணவரே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லி அருகேயுள்ள காசியாபாத் என்ற இடத்தில், அசோக் குமார் (வயது 60) என்ற நபர், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார்.

அப்போது இரவு உணவு வேண்டும் என்று மனைவியிடம் கூறியிருக்கிறார். ஆனால் மனைவியோ உணவு தயாரிக்கத் தாமதமாக்கவே ஆத்திரமடைந்த அசோக்குமார் தனது கைத்துப்பாக்கியால் மனைவியை சுட்டுக் கொன்றார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், காவல்துறை விசாரணையில் அசோக் குமார் தான் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.