Home Featured தொழில் நுட்பம் கனடா – உலகத் தமிழ் இணைய மாநாட்டு தேதிகளில் மாற்றமில்லை!

கனடா – உலகத் தமிழ் இணைய மாநாட்டு தேதிகளில் மாற்றமில்லை!

1595
0
SHARE
Ad

infitt-16 tamil internet conf- 537x 360தொரண்டோ – கனடாவின் தொரண்டோ நகரில் உத்தமம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 2017-ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் இணைய மாநாடு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 26-27 நாட்களில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

உத்தமம் அமைப்பின் அதிகாரபூர்வ இணையத் தளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் அதன் செயல் இயக்குநர் தவரூபன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தவரூபனின் முழுமையான அறிக்கை பின்வருமாறு:

#TamilSchoolmychoice

“உத்தமம் வருடாந்த தமிழ் இணைய  மாநாடு 2017  தொடர்பில் உத்தமம் செயலகத்தின் அனுமதியுடன் முடிவுகளை எடுக்கவும் செயற்பாடுகளை முன்னெக்கவும் ஒருங்கிணைக்கவும் கனடாவில்   மாநாட்டு நிகழ்ச்சிக் குழுத்தலைவர் திரு செல்வகுமார் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

இதுவரை உள்ள செயற்குழு  முடிவுகளின் படி மாநாட்டு திகதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை வருகின்ற ஆகஸ்ட் 26 -27 திகதிகளில் கனடாவின் தொரண்டோ மாநிலத்தில்  நடைபெறும் . முனைவர் செல்வகுமார் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.

இந்நிலையில்  செயற்குழுவின் அல்லது செயல் இயக்குனரின் அனுமதியின்றி  எந்தவொரு உத்தமம் உறுப்பினரும்  ஊடகவியலாளர் மாநாடுகள் நடாத்துவதோ மாநாடு தொடர்பில் உத்தியோக பூர்வ கருத்துக்களை வெளியிடுவதோ அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு யாரும் தெரிவிக்கும் பட்சத்தில் அது உத்தியோகபூர்வமானதாக அமையாது.

உத்தமத்தின் நிர்வாகம் சம்பந்தமாகவோ உறுப்புரிமை சம்பந்தமாகவோ  செயல்இயக்குனராகிய என்னுடன் நேரடியாக மின்னஞ்சல் வழியாகவோ தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு தீர்வுகளை பெறமுடியும்

மின்னஞ்சல்:  ED@infitt.org தொலைபேசி : +94 777 563213 .

உத்தமம் புதிய தலைவர் திரு செல்வமுரளியுடனும் தொடர்பு கொள்ளலாம்.

உத்தமம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக கட்டுப்பாட்டில் உள்ள இணையத்தளங்கள் தற்போதைய நிலையில் பின்வருவன மட்டுமே”

www.infitt.org

www.infitt.com

www.tamilinternetconference.org

உத்தியோக பூர்வ முகப்புத்தக பக்கம்

https://www.facebook.com/infitt/

மாநாடு தொடர்பிலான மின்னஞ்சல் தொடர்புகளுக்கு:  cpc2017@infitt.org

2017 தமிழ் இணைய மாநாட்டுக்காக பிரத்தியேகமாக கனடாவில்  முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளம்(www.infitt.ca) இன்னும் உத்தமம் செயலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வராத காரணத்தினால் அதனுடனான தொடர்புகளை உறுப்பினர்கள் தற்போதைக்கு பேணவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.எம்மால் அறிவிக்கப்படும்வரை  அந்த தளம் ஊடாக எந்தவொரு பதிவுகளையோ பணப்பரிமாற்றத்தினையோ செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

மாநாடு தொடர்பில் பயண ஏற்பாடுகள் பதிவுகள் கட்டுரை சமர்ப்பிப்பு செயற்பாடுகளை செய்வதற்கு cpc2017@infitt.orgமற்றும் ed@infitt.org மின்னஞ்சல்களுடன் தொடர்பு கொள்ளவும்

தவரூபன், செயல் இயக்குனர்

உத்தமம் | www.infitt.org