Home Featured நாடு பக்காத்தான் ஹரப்பான் பொருளாளர் எம்.குலசேகரன்

பக்காத்தான் ஹரப்பான் பொருளாளர் எம்.குலசேகரன்

1348
0
SHARE
Ad

Kulasegaranஈப்போ – புதிய தலைமைத்துவம், புதிய சின்னம் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர்-அன்வார் இப்ராகிம் இணைத் தலைமையில் வீறுகொண்டு எழுந்துள்ள பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் பொருளாளராக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரான, ஜசெக கட்சியின் எம்.குலசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து குலசேகரன் இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்தவர் என சில சமூக ஊடகங்களில் சிலர் எழுதியுள்ளதைத் தொடர்ந்து, தான் இலங்கைத் தமிழரல்ல என்றும் இந்தியப் பாரம்பரியத்தைக் கொண்டவர் என்றும் குலசேகரன் மலாய் மெயில் பத்திரிக்கைக்கு விளக்கமளித்துள்ளார்.

தன்னை எதிர்மறையாக விமர்சித்துள்ள சில சமூக ஊடங்களுக்கு எனது பின்னணி தெரியாது என்றும் கூறியுள்ள குலசேகரன் ஜசெகவின் உதவித் தலைவர்களில் ஒருவராவார்.

#TamilSchoolmychoice

ஜசெகவின் சிபாரிசினாலும், கணிசமான இந்தியர்களைத் தான் பிரதிநிதிப்பதாலும், பக்காத்தான் ஹரப்பான் பொருளாளராகத் தான் நியமனம் பெற்றிருப்பதாக குலசேகரன் மேலும் தெரிவித்திருக்கிறார்.