Home Featured உலகம் தோக்கியோ சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் டாக்டர் சுப்ரா

தோக்கியோ சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் டாக்டர் சுப்ரா

1697
0
SHARE
Ad

japan-asean-health ministers meet-15072017 (15)தோக்கியோ – ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெறும் ஜப்பான் மற்றும் ஆசியான் சுகாதார அமைச்சர்களின் கூட்டு மாநாட்டில் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொண்டார்.

இன்று சனிக்கிழமை (15 ஜூலை 2017) காலையில் ஜப்பான்-ஆசியான் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் சுப்ரா, மலேசிய அரசாங்கம் அனைத்து தரப்பு மக்களுக்கும் எல்லா நிலைகளிலுமான சுகாதார சேவைகள் சென்றடைவதை உறுதி செய்யும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

japan-asean-health ministers meet-15072017 (6)“அனைத்துலக அளவிலான சுகாதார சேவை வழங்குதலும் – முதுமையடையும் மக்கள் தொகையும்” என்ற கருப்பொருளில் இந்த மாநாடு தோக்கியோவில் நடைபெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice

இன்று ஜப்பான் சுகாதார அமைச்சர் குழுவினருக்கும், மலேசியக் குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளிலும் கலந்து கொண்ட டாக்டர் சுப்ரா ஜப்பான் சுகாதார அமைச்சருடன் சுகாதார சேவைகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டார்.

japan-asean-health ministers meet-15072017 (10)japan-asean-health ministers meet-15072017 (14)japan-asean-health ministers meet-15072017 (4)japan-asean-health ministers meet-15072017 (7)நன்றி: செய்தி – படங்கள்: drsubra.com