Home Featured இந்தியா டிராபிக் இராமசாமி வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்பட்டார்!

டிராபிக் இராமசாமி வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்பட்டார்!

1422
0
SHARE
Ad

Traffic Ramaswamy-file picசென்னை – தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக, தமிழ் நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து அடிக்கடி வழக்கு போடுபவர் – போராட்டம் நடத்துபவர் டிராபிக் இராமசாமி.

இன்று சனிக்கிழமை கட்டடம் ஒன்றின் நான்காவது மாடியில் ஏறிப் படுத்துக் கொண்டு, கதிராமங்கலம் போராட்டவாதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சில அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த டிராபிக் இராமசாமி அப்படிச் செய்யாவிட்டால், கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டல் விடுத்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து சில காவல் துறை அதிகாரிகள் அவரிடம் சென்று நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். தற்கொலை மிரட்டலை நிறுத்திக் கொண்டு கீழே இறங்கி வரவேண்டும் என அவரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

இருந்தும் அவர் கீழே இறங்கி வர மறுத்ததைத் தொடர்ந்து, இறுதியாக டிராபிக் இராமசாமி வலுக்கட்டாயமாக நான்காவது மாடியிலிருந்து கீழே இறக்கப்பட்டார்.

இதன் காரணமாக, அந்த வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.