Home Featured கலையுலகம் பிக் பாஸ்: ஓவியா காப்பாற்றப்பட்டார்!

பிக் பாஸ்: ஓவியா காப்பாற்றப்பட்டார்!

1747
0
SHARE
Ad

Oviyabigbossசென்னை – நேற்று சனிக்கிழமை இரவு தமிழகத்தில் ஸ்டார் விஜய் அலைவரிசையில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சி மலேசிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் நிறைவுக்கு வந்தபோது, பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டே நிகழ்ச்சியில் தொடர்வதற்கு இரசிகர்களால் காப்பாற்றப்பட்டது நடிகை ஓவியா என்பதை நிகழ்ச்சி நடத்துநர் கமல்ஹாசன் அறிவித்தார்.

அவர் காப்பாற்றப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை கமல் விளக்கவில்லை என்றாலும், ஓவியாவின் இயல்பான தன்மை, எதையும் வஞ்சகமின்றி, புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் பண்பு, அவ்வப்போது காட்டும் கவர்ச்சி போன்ற அம்சங்களால் அவருக்கு இரசிகர்கள் தொடர்ந்து பெருமளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

“ஓவியா வெளியேற்றப்பட்டால் நாங்கள் கூடி போராட்டம் நடத்துவோம்” என ஓர் இரசிகர் டுவிட்டரில் பதிவிடும் அளவுக்கு ஓவியாவுக்கு செல்வாக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சியால் கூடி வருகிறது.

#TamilSchoolmychoice

எஞ்சிய வையாபுரி, ஜூலியானா, ஆர்த்தி ஆகிய மூவர் இந்த வாரத்தோடு வெளியேற்றப்பட முன்மொழியப்பட்டுள்ள நிலையில் நிகழ்ச்சியிலிருந்து அடுத்து வெளியேறப்போகிறவர் யார் என்பதை இன்று ஞாயிற்றுக்கிழமை ஒளியேறும் நிகழ்ச்சியில் அறிவிக்கப் போவதாகவும் கமல் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இன்றைய நிகழ்ச்சியில் விதிமுறைகளுக்கு முரணாக நடந்து கொண்டதால் வெளியேற்றப்பட்ட நடிகர் பரணி குறித்தும் பேசப் போவதாகவும் கமல் அறிவித்திருக்கிறார்.

முன்மொழியப்பட்ட மூவரில் இன்றோடு வெளியேறப் போகிறவர் யார் என்பது இன்றிரவு தெரிந்து விடும்.