Home Featured கலையுலகம் பிக் பாஸ்: ஆர்த்திக்கு இன்றோடு ‘ஆப்பு’ வைக்கப்படுமா?

பிக் பாஸ்: ஆர்த்திக்கு இன்றோடு ‘ஆப்பு’ வைக்கப்படுமா?

1799
0
SHARE
Ad

aarthi ganesh-சென்னை – அடுத்து யார் மீது யார் கோள் சொல்லுவார் – யார் பொய் சொல்லுவார் – யாருக்கும் யாருக்கும் மோதல் வெடிக்கும் – எனப் பல்வேறு பரபரப்புகளுடன் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி தொடங்கியது முதல் தமிழ் நாட்டை மட்டுமல்லாது, உலக அளவிலும் தமிழ் இரசிகர்களைக் கலக்கி வருகிறது. தமிழகத்தில் ஒளிபரப்பான மறு நாளில் மலேசியாவிலும் அஸ்ட்ரோ 224 அலைவரிசையில் ஒளிபரப்பாகி வருவதால் மலேசிய இரசிகர்களிடத்திலும் இந்த நிகழ்ச்சிதான் எங்கு போனாலும் பேசப்படும் தலைப்பாக மாறி வருகிறது.

போதாக் குறைக்கு தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிரான நிகழ்ச்சி என்ற கூக்குரல்கள் – நிகழ்ச்சி நடத்தும் கமல்ஹாசனைக் கைது செய்யுங்கள் என இந்து முன்னணி காவல் துறையில் புகார் – சட்டம் என்னைப் பாதுகாக்கும் என்ற கமலின் பதிலடி – என பிக் பாஸ் வீட்டிற்கு வெளியிலும் சர்ச்சைகள் வெடித்து இரசிகர்களை ஈர்த்துள்ளன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இந்த வாரத்தோடு கீழ்க்காணும் 4 பங்கேற்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென சக பங்கேற்பாளர்களால் முன்மொழியப்பட்டுள்ளனர்.

  • ஜூலியானா
  • ஓவியா
  • ஆர்த்தி
  • வையாபுரி

இவர்களை இரசிகர்கள் காப்பாற்ற நினைத்தால், குறிப்பிட்ட செல்பேசி எண்ணில் அழைக்கலாம்.இரசிகர்களின் வாக்குகள்படி யார் குறைந்த வாக்குகள் பெறுகிறார்களோ அவர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

சமூக ஊடகங்கள், பார்வையாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளின்படி இந்த நால்வரில் பெரும்பாலோரின் வெறுப்புக்கு ஆளாகியிருப்பது நடிகை ஆர்த்திதான். அவரது அதிகப் பிரசிங்கித்தனம், வாயாடல், சாதாரண ஜூலியானாவை ‘போலி’ என கேவலப்படுத்துவது, எல்லாவற்றையும் செய்துவிட்டு தான் செய்தது சரிதான் என வாதிடுவது, காயத்ரி ரகுராமிடம் கோள் மூட்டி விடுவது எனப் பல காரணங்களால் இரசிகர்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கும் ஆர்த்தியைத்தான் இந்த முறை இரசிகர்கள் வெளியேற்றுவார்கள் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

bigg-boss-kamal-hassanகமல்ஹாசன் இன்று சனிக்கிழமை இரவு தமிழகத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இரசிகர்களின் முடிவை அறிவிப்பார்.

அல்லது, இரசிகர்களிடையே பரபரப்பை ஏற்றும் வண்ணம் இறுதி வரை அறிவிக்காமல், மற்ற விஷயங்களைப் பேசிவிட்டு வெளியேறுபவர் யார் என்பதை கமல் நாளை அறிவிக்கலாம். கடந்த வாரம் இப்படித்தான் ஒருநாள் விட்டு கஞ்சா கருப்பு வெளியேற்றத்தை அறிவித்தார்.

இரசிகர்கள் இன்றோடு ஆர்த்திக்கு ‘ஆப்பு’ வைத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றுவார்களா?

ஆவலுடன், ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர், ‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இரசிகர்கள்!

-செல்லியல் தொகுப்பு