Home Slider பிக்பாஸ்: ஆர்த்திக்கு எதிராகப் பொங்கி எழுந்த ஜூலி!

பிக்பாஸ்: ஆர்த்திக்கு எதிராகப் பொங்கி எழுந்த ஜூலி!

1637
0
SHARE
Ad

Bigbossjulieசென்னை – பிக்பாஸ் நிகழ்ச்சியில் எஞ்சியிருக்கும் 13 பிரபலங்களுக்குள் அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் கூட, பெரிய அளவிலான பிரச்சினைகள் வெடிக்காமல் இருந்து வந்தது.

ஆனால், கஞ்சா கருப்பு, பரணியையும், ஆர்த்தி, காயத்ரி இருவரும் ஜூலியையும் குறி வைத்து ‘போலியாக நடிக்கிறார்கள்’ என்று அடிக்கடி வசை பாடி வந்ததால் தற்போது பிரச்சினை பெரிதாக வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.

பரணியைப் பற்றி எல்லோரிடமும் புறம் பேசுவதையே கஞ்சா கருப்பு வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதே போல் ஜூலி மீதான வெறுப்பை ஆர்த்தியும், காய்த்ரியும் கடுமையாகவே வெளிப்படுத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

பரணியையும், ஜூலியையும் போலி என்று கூறி குத்திக் காட்ட ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என்ற அங்கத்தை, கஞ்சா கருப்பும், ஆர்த்தி, காயத்ரியும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில், பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜூலி, ஆர்த்திக்கு எதிராக நேரடியாகவே தனது எதிர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பது தான் தற்போதைய சுவாரசியம்.

தமிழ்நாட்டில் நேற்றே இந்த எபிசோட் ஒளிப்பரப்பாகிவிட்ட நிலையில், மலேசியாவில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில், அதனைக் காணலாம்.

இந்நிகழ்ச்சி கலாச்சார சீர்கேடு என்று ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவித்து வந்தாலும் கூட, பெரும்பாலானவர்கள் இதனை ஒரு சுவாரசிய நிகழ்ச்சியாகவும், எப்படி சுயமாக இருப்பது?, எப்படி தன்னை விரும்பாதவர்களை சமாளிப்பது? எப்படி கூட்டுக் குடும்பமாக வாழ்வது போன்றவைகளை இந்த பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து அறிந்து கொள்வதாக நட்பு ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.