Home கலை உலகம் சட்டம் என்னைப் பாதுகாக்கும் – கமல் பதிலடி!

சட்டம் என்னைப் பாதுகாக்கும் – கமல் பதிலடி!

1315
0
SHARE
Ad

bigg-boss-kamal-hassanசென்னை – விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குக் கண்டனம் தெரிவித்த இந்து முன்னணி கட்சி, அந்நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் கமல்ஹாசனைக் கைது செய்யுமாறு காவல்துறையில் புகார் அளித்தது.

இந்நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று புதன்கிழமை சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல், “சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அச்சட்டம் என்னைப் பாதுகாக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், “என்னைக் கைது செய்ய  வலியுறுத்துபவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றும் கமல் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice